Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆபாசமாக பேசிய வியாபாரி…. தம்பதியினர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

ஆபாசமாக பேசியதை தட்டி கேட்டதால் தம்பதியினரை சரமாரியாக தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் கே.கே நகர் 10-வது தெருவில் விஜயகுமார்(38)-சாந்தி(32) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாந்தி வில்லிவாக்கம் மீன் மார்க்கெட்டிற்கு மீன் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது மீன் வியாபாரியான முனியசாமி என்பவரிடம் நல்ல மீன் கிடைத்தால் போன் செய்யுங்கள் என கூறி சாந்தி தனது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். இதனை அடுத்து முனியசாமி சாந்தியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சடைந்த சாந்தி இது பற்றி தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் தம்பதியினர் இருவரும் மார்க்கெட்டிற்கு சென்று முனியசாமியை தட்டி கேட்டபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த முனியசாமி அவரது நண்பர்களான விஜய் சங்கர்(27), காளிதாஸ்(30), கண்ணன்(35) ஆகியோருடன் இணைந்து விஜயகுமார் மற்றும் சாந்தி ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் மீன் வெட்டும் கத்தியால் அவர்களை வெட்டியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முனியசாமி உள்பட 4 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |