Categories
சினிமா

ஆபாசமா பேசுறாங்க.. வழக்கு போட்டும் மனஉளைச்சலில் அமலாபால்…..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாபால் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை கொட்டிவாக்கத்தில் சேர்ந்தவர் அழகேசன். தொழிலதிபரான இவர் கடந்த ஆண்டு நடிகை அமலாபாலை ஆபாசமாக பேசியதாக கூறி , அமலாபால் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்க காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குறித்து விசாரித்த காவல்துறை இதில் மேலும் ஒரு தனியார் ஊழியருக்கு தொடர்பு இருப்பதாக கூறி பாஸ்கரன் என்பவரையும் கைது செய்தது.இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முறையீடு செய்து ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் அமலாபால் தொடர்ந்த வழக்கு பொய் வழக்கு என்று கூறியும் , இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாஸ்கரன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தபோது , அமலாபால் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து , இந்த மனு மீது காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அமலாபால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Categories

Tech |