திருச்சி மணப்பாறையை அடுத்த பூமாலை பட்டியை சேர்ந்தவர் ராஜா(44). இவர் சென்ற சில வருடங்களுக்கு முன் லண்டனிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தார். இதையடுத்து சொந்தஊர் திரும்பிய பின் திருப்பூரில் துணிகளை வாங்கி பிஸ்னஸ் செய்துவந்துள்ளார். இதற்கிடையில் இவர் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளிலுள்ள பல வெப்சைட்டுகளுக்கு அனுப்பி, அதன் வாயிலாக லட்சக் கணக்கில் சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது.
இத்தகவல் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு தெரியவந்தது. பின் அது தொடர்பான தகவல்களை சி.பி.ஐ-க்கு மத்திய உளவுப்பிரிவினர் அனுப்பி வைத்திருக்கின்றனர். அத்துடன் ராஜாவின் செயல்பாடுகள் மற்றும் அவர் பதிவேற்றம் செய்துள்ள வெப்சைட்டுகள் பற்றி சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். அதன்பின் டெல்லியிலிருந்து வந்த 4 சி.பி.ஐ அதிகாரிகள் உள்பட 6 பேர், பூமாலைப்பட்டியிலுள்ள ராஜா வீட்டுக்கு வந்து சோதனை செய்தனர்.
மேலும் ராஜாவின் செல்போன், லேப்டாப் மற்றும் எலெக்ட்ரிக் சாதனங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி இருக்கின்றனர். இந்நிலையில் இளம் சிறார்களின் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி லட்சக் கணக்கில் ராஜா பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது. இதற்கிடையில் ராஜாவின் தந்தையும் தாயும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
இதில் தந்தை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் ஆவார். அத்துடன் ராஜாவின் மனைவி தனியார் கல்லூரியில் உதவிப்பேராசிரியராக உள்ளார். ராஜாவின் செயல்பாடுகள் எதுவும் அவருடைய குடும்பத்தினருக்கே தெரியாமல் இருந்துள்ளது. பின் இதுகுறித்து அறிந்த ராஜாவின் குடும்பத்தினர் அதிர்ந்து போயிருக்கின்றனர். மேலும் தொடர்ந்து நடந்துவரும் விசாரணைக்கு பிறகே மற்ற தகவல்கள் தெரியவரும்.