பெண் ஊழியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய மேலாளரை துவம்சம் செய்த இளம்பெண் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.
சீனாவில் அரசு அலுவலகம் ஒன்றில் வேலை செய்யும் மேலாளர் வாங் என்பவர் தனக்குக் கீழ் பணிபுரியும் பெண் ஊளியரான ஜாவோவிற்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். தொடர்ந்து இதே போன்று மூன்று முறை ஆபாச குறுஞ்செய்தி வந்ததால் பொறுமையை இழந்த ஜாவோ தரையை சுத்தம் செய்யக்கூடிய மொபய் கொண்டு வாங்கின் அறைக்குள் நுழைந்து அவரை சரமாரியாக அடித்து உள்ளார்.
கிட்டத்தட்ட 14 நிமிடங்களாக மொபை கொண்டு வாங்கை சரமாரியாக தண்ணீரை முகத்தில் வீசி அடித்து அந்த அறையை ஒருவழியாக ஆக்கி விட்டார். அதனையடுத்து ஜாவோ போலீசில் புகார் அளித்ததுள்ளார் .இதனைத்தொடர்ந்து வாங் பதவியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதோடு அவர் சார்ந்த கட்சி உறுப்பினரிலிருந்தும் நீக்கப்பட்டார்.