ஆசிரியைக்கு ஆபாச செய்திகள் அனுப்பிய வரலாறு ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் நாகாச்சி பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்திரக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வரலாறு ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சந்திரன் ஆசிரியை ஒருவருக்கு ஆபாச செய்திகளை அனுப்பியும் ஆபாசமாக பேசியும் வந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை உடனடியாக சத்திரக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி சந்திரனின் செல்போனை ஆய்வு செய்ததில் ஆபாசமாக பேசியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சந்திரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.