Categories
மாநில செய்திகள்

ஆபாச நடனம் கூடாது…! கோவில் விழாவில் கரகாட்ட நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு விதித்து கோர்ட் அனுமதி.!!

மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தில் கோவில் விழாவில் கரகாட்ட நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது.

மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் விழாவில் கரகாட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கரகாட்ட நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ, இரட்டை அர்த்த பாடல்களோ இடம் பெறக் கூடாது. கரகாட்டத்தில் நாகரீகமான உடைகளை அணிய வேண்டும். அரசியல் கட்சி, மதம், சமூகம், ஜாதியை குறிப்பிடும் வகையில் பாடல், நடனம் இருக்கக் கூடாது. கரகாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா மற்றும் மதுபானங்களை உட்கொள்ளக்கூடாது  என பல்வேறு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.

Categories

Tech |