ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலிகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ, விஜய் நடித்த குஷி உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவருடைய கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா மீது ஆபாச படங்கள் தயாரித்த குற்றச்சாட்டு இருந்தது. இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். ராஜ்குந்த்ரா குற்றவாளி என நிரூபிக்க ஆதாரங்கள் கிடைத்துள்ளதை அடுத்து திடீரென போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் அவரது மனைவி ஷில்பா ஷெட்டி மீது புகார் எழுந்துள்ளது. குந்த்ராவின் வியான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தான் ஆபாச படங்கள் தயாரித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நிறுவனத்திலிருந்து சுல்பா ஷெட்டி ராஜினாமா செய்துள்ளார். ஆபாச படங்கள் மூலம் வருமானம் ஈட்டினாரா என ஷில்பா ஷெட்டியின் வங்கி கணக்குகளும் சோதனை செய்யப்படுகிறது.