உத்தரகண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் நவ்முண்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஒரு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவர் சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவிகள் தங்களுடைய பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால் காவல் நிலையத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் ஆசிரியரை சிறை பிடித்து கடுமையாக தாக்கினர். அதோடு அவரின் சட்டையை கிழித்து முகத்தில் கருப்பு மை பூசி செருப்பு மாலை அணிவித்து ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஆசிரியரை மீட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.