Categories
சென்னை

ஆபாச படம் காட்டி 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 63 முதியவரின் வெறிச்செயல்…!!!

சென்னையில் இன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 63 முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, திருவொற்றியூர் சரஸ்வதி நகரில் கமலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். கணவரை இழந்து வாழும் கமலத்திற்கு அத்தியாவசிய தேவைக்கே பஞ்சம் ஏற்பட்டது. இதனால் மூன்று மகள்களையும் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விடுவார்.

இந்த நிலையில் கமலம் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் 63 வயது முதியவர் புஷ்பராஜ் என்பவர் ஆண்டார்குப்பம் என்னும் பகுதியில் வாட்ச்மேன் வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் நேரங்களில் தனியாக இருக்கும் மூன்று சிறுமிகளிடம் மூன்று மாதங்களாக செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.

இதனை தாங்கிக் கொள்ள முடியாத சிறுமிகள், வேலைக்கு சென்று வீடு திரும்பிய தன் தாயிடம் கூறினர். அதன் பிறகு கமலம் அக்கம்பக்கத்தினரிடம் முதியவரின் செயலைக் கூறி பின்பு காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் மகளிர் காவல் துறையினர், அந்த முதியவரை கைது செய்தனர். அதன்பின் 63 வயது முதியவர் புஷ்பராஜ் மீது வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |