பிரேம்குமார் (59) என்பவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். அதில் இரண்டு பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் பிரேம்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பகுதியை சேர்ந்த சிறுமிகளிடம் நைசாக பேசி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன்பிறகு தனது போனில் உள்ள ஆபாச வீடியோக்களை காண்பித்து சிறுமிகளை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனைப் போலவே சிறுவர்களையும் அழைத்து சென்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் தனது பெற்றோரிடம் கூறினான். இதையடுத்து பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் பிரேம்குமார் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Categories