ரோமில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட போப் ஆண்டவர் கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரியார்கள் ஆன்லைன் வாயிலாக ஆபாச படங்கள் பார்ப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். பக்தியையும் அன்பையும் பரப்ப வேண்டிய கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் ஆன்லைனில் ஆபாச படங்கள் பார்ப்பதை போப் பிரான்சிஸ் வேதனையுடன் ஒப்புக்கொண்டுள்ளார். சமூக ஊடகம் என்பது பலரின் கைகளில் இருக்கும் ஒரு தீமை. பாமரர்கள் முதல் பாதிரியார்களிடம் வரை ஆபாசம் என்ற பிசாசு சமூக ஊடகம் மூலமாக நுழைகிறது .
இன்றைய கருத்தரங்குகள் எவ்வாறு தொழில்நுட்ப ஆர்வலர்களாகவும் சமூக ஊடக உலகில் மூழ்கி இருக்கிறார்கள் என்ற கேள்விக்கும் பதில் அளித்து பேசிய அவர், நம்முடைய அடையாளத்தை மறந்து விடாமல் இருக்க வேண்டும். மேலும் பணிவாகவும் தவறான வழிகளில் செல்லாமலும், அகம்பாவம் இல்லாமலும், கிறிஸ்தவராக இருப்பது தொடர்பான மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று வருங்கால மதகுருக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.