மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் ஒருவர் தனது உறவினர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் இளம்பெண் கூறியதாவது, எனது கணவர் வெளியூர் சென்றிருந்தபோது அவரது நண்பர் எங்களது வீட்டிற்கு வந்தார்.
அப்போது என்னை ஆபாசமாக படம் பிடித்து வைத்திருப்பதாக கூறி மிரட்டி அவர் 50 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை வாங்கினார். அதன் பிறகும் தொடர்ந்து பணம் கேட்டு என்னை மிரட்டுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் கூறியுள்ளார். இதனை அடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்த பிறகு அந்த பெண் குழந்தைகளுடன் அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.