ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
பிரபல இயக்குனரும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து இணையத்தளம் மற்றும் செல்போன்களில் பதிவேற்றம் செய்தது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக முன்ஜாமீன் கேட்டு ராஜ்குந்த்ரா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இருப்பினும் ஆதாரங்கள் வலுவாக இருந்ததால் அவருக்கு இதுவரை முன்ஜாமீன் தரப்படாமல் இருந்தது. இதனைத்தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார் ராஜ்குந்த்ரா, இதனை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபாய் பிணை தொகையுடன் முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.