Categories
தேசிய செய்திகள்

ஆபாச பட வழக்கு…. “சுமார் 1,500 பக்க குற்றப்பத்திரிக்கை”…. சரியாக சிக்கிக்கொண்ட ராஜ்குந்த்ரா…!!!

பிரபல தொழிலதிபர் ராஜ்குந்த்ரா மீது ஆபாச பட வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரபல தொழிலதிபரும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ்குந்த்ரா மற்றும் அவரது நண்பர் ரியான் தோர்பே இருவரும் ஆபாச படங்கள் தயாரித்து சில சமூக செயலிகள் மூலம் வெளியிட்டது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ராஜ்குந்த்ரா என்றும், இந்த வழக்கில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் மிகவும் வலுவாக இருப்பதாகவும் மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நகராரே கூறியுள்ளார். இருவரும் தற்போது நீதிமன்ற காவலில் மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு நேற்று மும்பை மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது இந்த வழக்கில் ராஜ் குந்த்ரா மற்றும் அவரது நண்பர் ரியான் தொபே இருவருக்கும் எதிராக 1500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை ஒன்றை மும்பை குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்துள்ளனர். மேலும் இவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மோசடி மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்கள் இந்த படங்களில் நடிக்க பயன்படுத்தப்பட்ட பெண்கள் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்தவர்கள் என்பதும் இவர்களை பயன்படுத்தி பல படங்கள் தயாரித்து அதனை இணையதளங்கள் மற்றும் அலைபேசி வாயிலாக பதிவேற்றம் செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வீடியோக்களுக்கு பல கோடி வரை சந்தாக்கள் செலுத்தப்பட்டுள்ளன எனவும் இதன் மூலம் ராஜ்குந்த்ரா கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இதில் பயன்படுத்தப்பட்ட பெண்களுக்கு பெரும்பாலும் பணம் தரப்படவில்லை எனவும் சில நேரங்களில் மட்டும் பெயரளவில் பணம் அளித்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது

Categories

Tech |