போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரி அதிரடியாக உத்தரவிட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துதாஸ் என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 2 மாணவிகள் கிறிஸ்துதாஸ் வகுப்பறையில் ஆபாசமாக பாடம் நடத்துவதாக புகார் அளித்தனர். அந்த புகாரின் படி குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதன் அடிப்படையில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கப்பதிந்து கிறிஸ்துதாசை கைது செய்தனர். இதனை அடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி கிறிஸ்துதாஸை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.