சமூக ஊடகங்களில் ஆபாச வீடியோக்களை கொண்டு ஆண்களை அச்சுறுத்திய கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பெங்களூரு மாநிலத்தில் சமூக ஊடகங்களில் ஆபாச வீடியோக்களை காண்பித்து ஆண்களை அச்சுறுத்திய கும்பலை சைபர் கிரைம் பிரிவினர் கைது செய்தனர். இது குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ராஜஸ்தானில் பாரத்பூரைச் சேர்ந்த சாஹுன், ஷாருக் கான், நசீர் மற்றும் ஷாஹித் அன்வர் ஆகியோர் பெண்களின் பெயர்களை பயன்படுத்தி போலியாக அவர்களின் கணக்கை உருவாக்கி இந்த காரியத்தை செய்தது தெரியவந்துள்ளது.
பின்பு மற்ற ஆண்களிடம் அவர்களது வீடியோக்களை பதிவிடுமாறு கூறி அவரது வீடியோக்களை வைத்து மிரட்டியதும் தெரியவந்தது. இந்த கும்பலின் நடவடிக்கைகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர்கள், சைபர்கிரைம் பிரிவினர் ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.