Categories
தேசிய செய்திகள்

ஆபாச வீடியோவுக்கு அடிமை… ‘இரண்டு சிறுவர்களால் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்’… பாத்ரூமில் அதிர்ச்சி…!!!!

அசாமில் 11 வயதான இரண்டு சிறுவர்கள் 6 வயது சிறுமியை கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தை சேர்ந்த 6 வயது சிறுமி கல்குவாரியில் உள்ள பாத்ரூமில் மயங்கி கிடப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு இருந்த பாத்ரூமில் சிறுமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கல்குவாரியில் இருந்தவர்கள், பெற்றோர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அந்த சிறுமியின் பெற்றோர்கள் மூன்று சிறுவர்கள் வந்து தங்களிடம் சிறுமி மயங்கி கிடப்பதாக தகவல் தெரிவித்தனர் என்று கூறியுள்ளனர். இதையடுத்து அந்த சிறுவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அதில் ஒரு சிறுவனின் தந்தை விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. மற்ற 2 சிறுவர்களிடம் விசாரணை செய்த போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியது. 11 வயதான இரண்டு சிறுவர்களில் ஒருவர் ஆங்கில வழி கல்வி கற்கும் சிறுவனாவார். அவருக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனது தந்தையின் செல்போனை பயன்படுத்தி வருகிறார். ஆன்லைன் வகுப்பிற்கு பிறகு அதில் வரும் ஆபாச படங்களை அவர் பார்த்து வந்துள்ளார். பிறகு மற்ற இரண்டு சிறுவர்கள் இடமும் சென்று இந்த வீடியோவை காண்பித்து வந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் 7 வயது சிறுமியை ஆபாச படம் பார்க்க வரும்படி வற்புறுத்தியுள்ளார். இதற்கு சிறுமி மறுப்பு தெரிவிக்கவே 11 வயது சிறுவன் சிறுமியை தாக்கியுள்ளார். பின்னர் வீட்டில் கூறி விடுவேன் என்று அந்த சிறுமி மிரட்டவே, ஆத்திரமடைந்த மூன்று சிறுவர்களும் அவரை கற்களால் தாக்கி கொலை செய்துவிட்டு பின்னர் பாத்ரூமில் தூக்கி சென்று போட்டுவிட்டு பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளது தெரிய வந்தது. இதில் இரண்டு  11 வயது சிறுவர்களும் ஒரு எட்டு வயது சிறுவனும் கைது செய்யப்பட்டார். மேலும் குற்றத்தை மறைத்து சாட்சியங்களை அழிக்க முயற்சித்ததாக கூறி ஒரு சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர்களின் இந்த வாக்குமூலம் கேட்டு காவல்துறையினரை மிரண்டுபோனர். இந்த செய்தி அப்பகுதி மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |