நாடு முழுவதும் செயல்பாட்டில் இருந்து அனைவரையும் வெகுவாக கவர்ந்த டிக் டாக் செயலி மூலம் பலரும் பிரபலம் அடைந்துள்ளனர். அவ்வாறு பிரபலமான ஒருவர் தான் தேனி நாகலாபுரத்தை சேர்ந்த சுகந்தி என்பவர். இவர் பல்வேறு ஆபாசமான வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவர் ஒரு சில பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து ஒத்த கடையை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவேற்றம் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட அந்த பெண் குழந்தையின் மேல் புகார் அளித்துள்ளார். அவ்வாறு அந்த பெண் அளித்த புகாரின் பேரில் மதுரை சைபர் கிரைம் போலீசார் சுகந்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.அந்த வழக்கின் அடிப்படையில் சுகந்தியை தேனியில் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளது தகவல் வெளியாகியுள்ளது.