Categories
மாநில செய்திகள்

ஆபாச வீடியோ….! தமிழகத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்….!!!!

சென்னை திருமங்கலத்தில் ஆன்லைனில் ஆபாச வீடியோ அனுப்பியதாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

சென்னை  திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் மதிவாணன் என்பவர் அம்பத்தூரை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருக்கு ஆன்லைனில் ஆபாச வீடியோ அனுப்பியதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து இந்த பள்ளி மாணவி அளித்த புகாரின் பெயரில் அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த ஆசிரியர் நேரடி வகுப்புகளின் போதும் மாணவர்களிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாரா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மூலமாக பாலியல் தொல்லைகள் வருவது அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Categories

Tech |