வளர்ந்து வரும் நவீனமயமான இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வழிகளில் மோசடிகள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக செல்போன் அல்லது கால் செய்தோ ஏமாற்றி பணத்தை பறித்து மோசடி கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பாக அவ்வப்போது மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளும் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மும்பையில் 64 வயது முதியவர் ஒருவர், இணைய பாலியல் மோசடியில் சிக்கி 17.80 லட்சத்தை இழந்துள்ளார். பெண்ணிடம் பேசுவதாக நினைத்து தெரியாத வாட்ஸ் ஆப் எண்ணில் இருந்து வந்த வீடியோ காலில் பேசிய அவரை ஆபாசமாக படம் பிடித்த சிலர், அவரை பல்வேறு விதமாக மிரட்டி லட்சக் கணக்கில் பணம் பறித்துள்ளனர். இதையடுத்து அவர் போலீசில் புகார் அளித்த நிலையில், தெரியாத எண்களில் இருந்து பெண் பெயரில் வரும் அழைப்புகளை எடுக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.