Categories
தேசிய செய்திகள்

ஆபீசுக்கு வரணும்னா…. தடுப்பூசி போட்டே ஆகணும்…. பிரபல நிறுவனம் அறிவிப்பு…!!!

நாடு முழுவதுமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதற்கு மத்தியில் இதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த அனைவருமே கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு மீண்டும் திரும்புவதற்கு தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், டெல்டா வகை வைரஸ் அதிகரித்து வருவதால் ஊழியர்கள் அலுவலகம் திரும்புவது சிக்கலாகி உள்ளது. எனவே வீட்டில் இருந்து பணிபுரிவது அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் வருவதற்கு யாராவது விரும்பினால் அவர்கள் தடுப்புசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .மேலும் ஓரிரு வாரங்களில் இந்த முறை அமெரிக்காவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |