ஆப்கானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றி விட்ட நிலையில் அங்கிருந்து மக்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றுவதற்காக வெளிநாடுகளுக்கு தப்பிப்பதற்காக விமான நிலையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். விமான விமானங்களை கூட்டம் கூட்டமாகவும், படியில் தொங்கியபடியும் ஏறி செல்லும் காட்சிகள் காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. அங்குள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற என்பதனால் பல்வேறு நாடுகளும் அந்நாட்டு பெண்களின் நிலைமையை குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றன.
அமெரிக்க படைகளும் முழுமையாக அங்கிருந்து வெளியேறிவிட்டன. இந்நிலையில் அமெரிக்க விமானத்தில் செல்லும் போது கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து ஜெர்மனியில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் விமானம் தரையிறக்கப்பட்ட சில வினாடிகளில் அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்து தாயும், சேயும் நலமுடன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.