ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்திய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையடுத்துஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப ஆன்லைனில் விசா பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இ-எமர்ஜென்சி எக்ஸ் மிக்ஸ் விசா என அழைக்கப்படுகிறது. இந்த விசாவுக்கு விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி அளிக்கப்படும். மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால் 97177 85379 என்ற எண்ணிற்கு அல்லது [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Categories