ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் 182 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. அங்குள்ள 13 மாகாணங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து இருக்கின்றது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்திருக்கின்றார்கள். இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையில் வெள்ள பாதிப்பால் 63 பேர் உயிரிழந்ததாக தலிபான்கள் அரசு கூறியுள்ளது.
மேலும் பலர் மாயமாக இருப்பதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக தலிபான்களின் செய்தி தொடர்பாளர் பேசும்போது ஆப்கானிஸ்தானில் வெள்ளப்பெருக்கு பாதிப்பிற்கு இதுவரை 182 பேர் உயிரிழந்திருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன என கூறியுள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் கன மழை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.