நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து நாட்டின் பெயரை ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் என மாற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த அனைத்து கைதிகளையும் தலிபான்கள் விடுதலை செய்துள்ளனர். அதில் கேரளாவை சேர்ந்த 8 பெண்கள் உள்ளிட்ட 24 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 8பேரும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் அமைப்பில் சேர நங்கார் பகுதிக்கு சென்றவர்கள். மேலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காபூல் குருத்வாராவில் நடந்த தாக்குதலில் 27 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு காரணமாக தேடப்பட்டு வந்த தீவிரவாதியான அய்ஜாஸ் அகங்காரும், தாலிபனால் விடுவிக்கப்பட்டுள்ளான்.
அய்ஜாஸை விசாரிக்க NIA அமைப்பினர் கடந்த ஆண்டு ஆப்கான் செல்லவிருந்த நிலையில், கொரோனா காரணமாக அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. விடுவிக்கப்பட இவர்கள் மற்ற நாடுகள் வழியே இந்தியாவிற்குள் நுழையலாம் என எதிர்பார்க்கபடுவதால், கண்காணிப்பை தீவிரப்படுத்த தேசிய புலனாய்வு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.