Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானிலிருந்து…. நாளை முழுமையாக வெளியேறும் அமெரிக்க படை… வெளியான தகவல்…!!!

ஆப்கானிஸ்தானிலிருந்து நாளை பாதுகாப்பு படைகளை முழுமையாக விலக்கி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவை சேர்ந்த நோட்டா கூட்டுப்படைகள் தலிபான்களுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது பதவியேற்றுள்ள அதிபர் ஜோ பைடன் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறும் என்று தெரிவித்திருந்தார். மேலும் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அமெரிக்க மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றும் பணியில் அமெரிக்க ராணுவம் தீவிரமாக ஈடுபட்டிருந்தது.

இதனால் ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் கடந்த 15 நாட்களில் சுமார் 1,20,000 மக்களை அமெரிக்க படை வெளியேற்றியுள்ளது. இந்நிலையில் நாளையுடன் அமெரிக்க அதிபர் விதிக்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில், அங்கிருந்து அமெரிக்க படைவீரர்கள் நாளை நாடு திரும்புவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |