பாகிஸ்தானுக்குள் நுழைய முயற்சித்த ஆப்கானியர்களை அந்நாட்டின் படைகள் சுட்டுக் கொன்றதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் சுமார் ஆயிரக்கணக்கான ஆப்கானிய மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டிற்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த நிலையில் அண்டை நாடான பாகிஸ்தானுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிய மக்கள் நுழைய முயற்சித்ததாக கூறப்படுகிறது.
அப்போது பாகிஸ்தானிய படைகள் ஆப்கானியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாகிஸ்தான் படைகள் சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயற்சித்த ஆப்கானியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தலிபான் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்ததாகவும், 3 பேர் கொல்லப்பட்டதாகவும் தலிபான் வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளனர்.