ஆப்கானிஸ்தானில் தலைவான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் பொருளாதார வீழ்ச்சியினால் அங்கு குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குழந்தைகளை பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம் என பல்வேறு நாடுகளில் சட்டம் இருந்தும் குழந்தை தொழிலாளர்கள் சட்டவிரமாக பணிகளில் ஈடுபடுத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சூழலில் கடந்த இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 16 கோடியாக அதிகரிப்பதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தலைவான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் பொருளாதார வீழ்ச்சியாலும் உலக நாடுகள் வழங்கும் நிதியை நிறுத்திய காரணத்தினாலும் அங்கு குழந்தைகள் அதிகமாக பணியமர்த்தப்பட்டு இருக்கின்றனர். எனும் அமைப்பினால் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஆப்கானில் சுமார் பத்து லட்சம் குழந்தையை தொழிலாளர்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் 50 % குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை ஹோட்டலில் மேஜை துடைக்கும் வேலைக்கு அமர்த்தி இருக்கின்றனர். அதுபோல அங்கு செங்கல் சூளைகளில் நான்கு அல்லது ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கோடை வெப்பத்திலும் அதிகாலை முதல் இரவு வரை தங்கள் குடும்பத்தினருடன் வேலை செய்து வருகின்றார்கள். அதிலும் இங்கு பெரும்பாலானவர்களுக்கு ஒரு நாள் உணவு என்பது தேனீரில் ஊற வைத்த ரொட்டி என்பது அதிர்ச்சியாக இருக்கிறது மேலும் இந்த குழந்தைகள் தங்கள் குடும்பத்தினரின் தேவையை தவிர வேறு எதுவும் அறியாது வேலை செய்து வருகின்றார்கள் இவர்களில் சிலர் மட்டுமே முன்னதாக பள்ளிக்கு சென்றுள்ளனர். கடந்த ஓராண்டில் ஆப்கானிஸ்தான் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதையும் இந்த கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது கடந்த வருடத்தை ஒப்பிடும்போது தங்கள் வருமானத்தில் பாதி அழக அதற்கு மேல் குறைந்திருப்பதாக கடந்த ஜூன் மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 77 சதவீதம் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் இது கடந்த டிசம்பரில் 61 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
Categories