Categories
தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து இன்று மேலும் 180 பேர்… 2 விமானங்களில் மீட்பு… மத்திய அரசு அறிவிப்பு…!!!

ஆப்கானிஸ்தானிலிருந்து 800-க்கும் மேற்பட்ட மக்களை இந்தியா இதுவரை மீட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது. வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு செல்ல பல முயற்சிகளை செய்து வருகின்றன. இதையடுத்து அந்தந்த நாடுகள் விமானங்களை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் என்று தங்கள் நாட்டு குடிமக்களை மீட்டு வருகின்றது. இதேபோல் அங்கிருந்து வெளியேற விரும்பும் மக்களையும் விமானங்களில் ஏற்றி செல்லப்படுகிறது. காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ராணுவம் மக்களை வெளியேற்றும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக இயங்கி வருகிறது.

இதற்காக ஏர் இந்தியா விமானம் மற்றும் விமானப் படைகள் முழுமூச்சில் செயல்பட்டு வருகின்றனர். காபூல் விமான இதயத்திற்கு செல்லும் இந்திய விமானம் அங்கு இருக்கும் இந்தியர்களை மட்டுமல்லாமல் பிற நாடுகளை சேர்ந்த மக்களையும் மீட்டுக் கொண்டு வருகின்றது. இதுவரை இந்தியர்கள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்டோரை இந்தியா மீட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஆப்கானிஸ்தானிலிருந்து 24 இந்தியர்கள், நேபாளத்தை சேர்ந்த 11 பேர் என 35 பேர் மீட்கப்பட்டு டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய விமானப்படை மூலம் காபூலில் இருந்து 180 பேர் வரை 2 விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்

Categories

Tech |