Categories
தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து… இந்தியர்களை மீட்கும் பணி மிகவும் சவாலாக இருந்தது… வெளியுறவுதுறை மந்திரி ஜெய்சங்கர்…!!!

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணி மிகவும் சவாலாக இருந்ததாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் நிலவும் நிலவரம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பேசினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது: “ஆப்கானிஸ்தானில் இருந்த இந்தியர்களை மீட்கும் பணி மிகவும் சவாலாக இருந்தது. ஆப்கானிஸ்தான் மக்களுடன் நட்புறவு தொடர வேண்டும் என்பதே இந்தியாவின் நீண்ட கால திட்டம். ஆப்கானிஸ்தானிலிருந்து இந்திய மக்களை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. விரைவில் அனைவரும் வெளியேறி விடுவார்கள் என்று அரசு உறுதி தெரிவித்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |