Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கைவிடப்பட்ட பணிகளை மீண்டும் தொடர விருப்பம்… தலிபான் அரசு அறிவிப்பு…!!!!!

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து அங்கு குண்டு வெடிப்பு சம்பவங்களும், வன்முறைகளும் வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் காரணமாக கைவிடப்பட்ட பணிகளை மீண்டும் தொடர இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக தலிபான் அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி இந்திய தூதரகத்தில் இருந்த அதிகாரிகளை இந்தியா திரும்ப அழைத்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவு தடைபட்டது.

இருந்த போதிலும் இந்தியா, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு  உணவு மற்றும் மருத்துவ உதவிகளை  வழங்கி வந்தநிலையில்  கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான தூதரக உறவு மீண்டும் தொடங்கியுள்ளது. இதனையடுத்து ஆப்கான் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறபட்டுள்ளதாவது, பாதியில் நிறுத்திய உள்கட்டமைப்பு திட்டங்களை  மீண்டும் தொடருவதாக இந்தியா கூறியுள்ளது.

Categories

Tech |