ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்த உள்நாட்டுப் போரில் ஆப்கானிஸ்தான் அரசிற்கு ஆதரவாக அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே உடன்படிக்கை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆப்கானிஸ்தான் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அரசு பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், தலிபான் பயங்கரவாதிகள் தங்களின் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அந்நாட்டின் பக்டியா மாகாணம் ஹர்டீஸ் பகுதியில் அரசு படையினருக்கு சொந்தமான ராணுவத் தளம் ஒன்று அமைந்திருக்கிறது. அந்த ராணுவ தளத்தில் நுழைவாயில் பகுதிக்கு அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரில் 3 பயங்கரவாதிகள் வேகமாக வந்துள்ளனர். சிறைச்சாலை அறிக்கை வந்தவுடன் 2 பயங்கரவாதிகள் காரில் இருந்து வெளியே குதித்து சென்றனர்.
காரின் இருந்த மற்றொரு பயங்கரவாதி காரை வேகமாக ஓட்டிச்சென்று இராணுவத் தளத்தில் நுழைவாயிலில் மோதி அந்த காரை வெடிக்க செய்துள்ளான். இந்த தற்கொலை படை தாக்குதலில் காரில் இருந்த ஒரு பயங்கரவாதியின் உடல் சிதறி உயிரிழந்தான். மேலும் பாதுகாப்பு படையினர் சிலரும் காயமடைந்துள்ளனர். இதனை அறிந்த பாதுகாப்பு படையினர் தப்பிச் சென்ற இரண்டு பயங்கரவாதிகளையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த சண்டை மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் 3 பாதுகாப்பு படையினர் உயிரிழந்த நிலையில், 5 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அதனால் இந்த மோதலில் பாதுகாப்பு படையினர் 3 பேரும், பயங்கரவாதிகள் மூன்று பேரும் என மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.