ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 10 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 19 ஆண்டுகளாக தொடர்ந்து உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் அரசு, இந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதுமட்டுமன்றி இராணுவ முகாம்கள், காவல் நிலையங்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்தும் பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
அதற்கு எதிராக அந்நாட்டு ராணுவம், தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து வான்வழி மற்றும் தரை வழியாக அதிரடி தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந் நாட்டின் விமானப்படை, ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் இருக்கின்ற குண்டூஸ் மாகாணத்தில் இருக்கின்ற கபான் அபாத் மாவட்டத்தில் தலிபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான் தாக்குதலை அரங்கேற்றியது. அதில் தலிபான் பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்ட நிலையில், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அதுமட்டுமன்றி பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் ஆகியவை முற்றிலுமாக அழிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தான் தெற்குப் பகுதியில் இருக்கின்ற காந்தஹார் மாகாணத்தில் போலீஸ் சோதனைச் சாவடி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பதில் காவல் அதிகாரிகள் 4 பேர் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.