தனியார் அமெரிக்க நிறுவனம் ஒன்று ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பும் மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு முடிவடைவதாக தலிபான் பயங்கரவாதிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் நோர்வே, கனடா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளும் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும் ஆப்கானிஸ்தானில் பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் சிலர் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்புபவர்களுக்கு அமெரிக்காவின் Blackwater என்ற ராணுவ கூலிப்படையினர் நிறுவனம் 6,500 டாலர் கட்டணம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் ஆப்கானிஸ்தான் நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மக்களை காபூல் விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக தனி கட்டணமும் வசூலிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.