ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள பாலுசிஸ்தான் மாகாணம் சாமன் நகரத்தின் ஹாஜி நிடா சந்தையில் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் கூறும்போது, “தடைசெய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த பிரிவினைவாதிகள் இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருக்கலாம். ஆனால் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.
இந்த குண்டுவெடிப்பில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என கூறியுள்ளனர். இதற்கு முன்னதாக கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி டர்பத் பஜாரில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஆறு பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.