வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி தங்களது வசம் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக இந்தியா உட்பட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது நாட்டு மக்களை விமானம் மூலம் வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கமலா ஹாரிஸ் வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கமலா ஹாரிஸ் இன்று காலை சிங்கப்பூருக்கு சென்றுள்ள நிலையில் நாளை நாட்டின் முக்கியமான தலைவர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் கமலா ஹாரிசின் இந்த சுற்றுப்பயணம் ஆப்கானிஸ்தான் பிரச்சனைக்கு முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்றாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.