ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பு 9 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் கிழக்குப் பகுதியில் உள்ள கபீஸா மாகாணத்தின் தாகா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் வெடிகுண்டு புதைத்து வைத்திருந்தனர். அப்போது அப்பகுதியை வழியே கார் சென்றதால் வெடிகுண்டு திடீரென வெடித்து சிதறியது.அதில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் போன்றே தெற்கு பகுதியில் உள்ள ஹெல்மெண்ட் மாகாணத்தில் ராணுவ வீரர்களின் சோதனைச்சாவடி முன்பாக பயங்கரவாதிகள் வெடி குண்டுகள் நிரப்பப்பட்ட காரை நிறுத்தி வைத்திருந்தனர்.
அதனை வெடிக்கச் செய்ததால் ராணுவ வீரர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் போன்று வெடிகுண்டு நிரப்பிய கார் கந்தஹார் மாகாணத்தில் வெடித்ததால் 2 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவங்களுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்றுக் கொள்ளவில்லை.இருந்தாலும் தலிபான் பயங்கரவாதிகள் தான் இந்த தாக்குதல்களுக்கு காரணம் என்று ஆப்கானிஸ்தான் அரசு கூறியுள்ளது.