பாகிஸ்தானை ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத குழுக்கள் மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத குழுக்கள் ஆப்கானிஸ்தானில் சில மாகாணங்களில் பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றது என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தாலிபான் உடன் நெருங்கிய தொடர்பில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானில் உள்ள மாகாணத்தில் 8 பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது.
அதில் மூன்று முகங்கள் தாலிபான்களின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. அதனை தொடர்ந்து கிழக்கு துர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயங்கரவாதக் குழுக்களுக்கு அங்கு பயிற்சி பெறுகின்றனர். நாட்டின் கிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் பதுங்கி உள்ளனர். இதற்கு முன்னதாக ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத் மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.