Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு தொடரும் கட்டுப்பாடு”…? தலிபான்கள் அதிரடி உத்தரவு…!!!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள்  ஆட்சியை கைப்பற்றிய உடன் அந்த நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அந்த நாட்டில் உள்ள பெண்கள் பாலின பாகுபாட்டால் பல்வேறு  சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதாவது ஆண்கள் துணை இல்லாமல் விமானங்களில் பயணிக்க தடை, ஆறாம் வகுப்பிற்கும் மேல் கல்வி கற்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்வதற்கு தடை என பெண்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இந்நிலையில் “பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். அதாவது அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும் எனவும், அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும்” எனவும் கூறியுள்ளனர்.

Categories

Tech |