உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. கோவிலை கட்டுவதற்கு பயன்படுத்துவதற்காக 115 நாடுகளில் இருந்து ஓடும் நதிகள் மற்றும் கடல்களில் இருந்து நீர் வரவழைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு சிறுமி காபுல் நதிநீரை அயோத்தி ராமஜென்ம பூமி வழங்குவதற்காக பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தார். அதன்படி புனித நீரை பெற்றுக் கொண்ட உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று, அந்த நீரை அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் ஊற்றி அபிஷேகம் செய்து வணங்கினார்.