Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் சுதந்திர தினம்… பீரங்கி குண்டு தாக்குதல்… பயங்கரவாதிகள்…!!!

ஆப்கானிஸ்தான் சுதந்திர தினத்தன்று காபூலில் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கும் உள்நாட்டு போரால் அங்கு தொடர்ந்து மோசமான சூழ்நிலை நிலவி கொண்டிருக்கிறது. இந்நிலையில் மோசமான பாதுகாப்பு நிலைக்கும் மத்தியில் நேற்று ஆப்கானிஸ்தான் 101-வது சுதந்திர தினத்தை கொண்டாடியது. அதனையொட்டி தலைநகர் காபூலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அதையும் மீறி காபூலில் பயங்கர பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காபூலில் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் 2 வாகனங்களிலிருந்து பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

கிழக்கு மாவட்டத்தில் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஏராளமான பீரங்கி குண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும், வடக்கு மாவட்டத்தில் குடியிருப்பு கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த பீரங்கி குண்டு தாக்குதலில் 4 சிறுவர்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.

அதே சமயத்தில் இந்த தாக்குதல் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என தலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இந்நிலையில் பீரங்கி குண்டு தாக்குதலுக்கு மத்தியில் சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் காபூலில் ராணுவ அமைச்சக வளாகத்துக்குள் உள்ள சுதந்திர தின நினைவு சின்னத்தில் அதிபர் அஷ்ரப் கனி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். அது மட்டுமன்றி நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்துள்ளார்.

Categories

Tech |