Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை”… பிரபல நாடு கடும் கண்டனம்…!!!!!

ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள்  அந்த நாட்டு மக்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதிலும் குறிப்பாக அந்த நாட்டில் உள்ள பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள்  இடைக்கால தடை விதித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும். மேலும் அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என கூறியுள்ளனர். இந்த கட்டுப்பாடுகளுக்கு தற்போது அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு இடைக்கால தடை விதித்துள்ள தலிபான்களின்  முடிவை அமெரிக்கா கடுமையாக கண்டிக்கிறது. இந்த மோசமான முடிவு ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் மீது கூடுதல் கட்டுப்பாட்டை விதிக்கவும், அவர்களின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை பயன்படுத்துவதை தடுக்கவும் தலிபான்கள் தலைமையில் எடுக்கப்பட்ட சமீபத்திய முயற்சியாகும்.

ஆப்கானிஸ்தானின் மக்கள் தொகையில் பாதி அளவு உள்ள பெண்களின் கல்வியை தடுத்து நிறுத்தும் இந்த ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாட்டின் விளைவாக தற்போது தலிபான்கள் சர்வதேச சமூகத்தில் இருந்து மேலும் விலகி அவர்கள் விரும்பும் சட்டபூர்வமான தன்மை மறுக்கப்படும். இதில் எங்களின் கூட்டு நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் அமெரிக்கா தொடர்பில் இருக்கிறது. அதனால் ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆதரவாகவும், அந்நாட்டு மக்களுக்கு மனிதாபிமான ஆதரவை வழங்குவதற்கும் எங்களின் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்” என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |