ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தின் ரீஸ் டாப்லி விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது..
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அக்டோபர் 22 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இதற்கிடையே நேற்று இங்கிலாந்து அணி பிரிஸ்பேனில் பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடியது. இதில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டிக்கு முன்னதாக பயிற்சியின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திற்கு முன் ஃபீல்டிங் பயிற்சியின் போது ரீஸ் டாப்லி கணுக்கால் காயம் அடைந்தார். இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது சரியான நேரத்தில் டாப்லி மீண்டு வர முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 28 வயதான அவர் இந்த ஆண்டு டி20 போட்டிகளில் இங்கிலாந்துக்கு முக்கிய வீரராக இருந்து வருகிறார், மேலும் அவர் இல்லாதது இங்கிலாந்துக்கு பெரும் அடியாக இருக்கும்.
டாப்லி இந்த ஆண்டு டி20ஐ போட்டிகளில் 17 விக்கெட்டுகளை எடுத்துள்ளார், மேலும் 2022 ஆம் ஆண்டு ஆட்டத்தின் மிகக் குறுகிய வடிவத்தில் இங்கிலாந்தின் சிறந்த விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆவார். சமீபத்திய ஆண்டுகளில் அவருக்கு காயம் தொடர்பான பிரச்சனைகள் இருந்ததால், கணுக்கால் பிரச்சினையில் இருந்து சீக்கிரம் விடுபடுவார் என்று நம்புகிறார்.
டாப்லி “இந்த வாரம் முழுவதும் மதிப்பீடு செய்யப்படுவார்” என்று இங்கிலாந்து அறிவித்தது, மேலும் விரைவில் குணமடையும் என்று நம்புகிறது, ஆனால் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டாப்லி சரியான நேரத்தில் குணமடையத் தவறினால், காத்திருப்பு பட்டியலில் இருக்கும் இங்கிலாந்து அணியின் லியாம் டாசன், ரிச்சர்ட் க்ளீசன் மற்றும் டைமல் மில்ஸ் ஆகியோரில் ஒருவர் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. டாப்லி ஒரு இன்னிங்ஸில் எந்த இடத்திலும் சிறப்பாக பந்து வீசக்கூடிய பவுலராக இருக்கிறார். இவர் டெத் ஓவரில் 7.8 எக்கனாமியில் வீசி வருவது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணி :
ஜோஸ் பட்லர் (கே), மொயின் அலி, ஹாரி புரூக், சாம் குர்ரன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட், அலெக்ஸ் ஹேல்ஸ்.
காத்திருப்பு வீரர்கள்: லியாம் டாசன், ரிச்சர்ட் க்ளீசன், டைமல் மில்ஸ்.