Categories
உலக செய்திகள்

ஆப்கான் அகதிகள் 20,000 பேருக்கு அடைக்கலம்…. இங்கிலாந்து அரசு அறிவிப்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் முற்றிலுமாக கைப்பற்றி விட்டனர். இதனால் தாலிபான் தலைமையிலான அரசு ஆப்கானை வழிநடத்தும் என்பதனால் அங்குள்ள மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். அவ்வாறு வெளியேறிய மக்கள் விமானங்களில் அடித்து பிடித்து ஏறும் வீடியோ வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஆப்கான் மக்களுடைய நிலை குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அகதிகளை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என் ஐநா வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல்,  தங்களுடைய கதவுகளைத் திறக்க வேண்டும் என்று சமூக செயல்பாட்டாளர் மலாலா உள்ளிட்ட பலரும் வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் ஆப்கானில் இருந்து வரும் 20,000 அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக இங்கிலாந்து பிரதமர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |