Categories
தேசிய செய்திகள்

ஆப்கான் சென்றால் தான் இந்தியாவின் அருமை புரியும்…. பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு…..!!!!!

நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி செய்வது உறுதியாகியுள்ளது. அதனால் அங்கு வாழ்வதற்கு மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே அங்கிருந்து மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓடுகின்றனர்.

இந்நிலையில் பீகாரில் பாஜக எம்எல்ஏ ஹரி பூஷன் தாகூர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்தியாவில் வாழ அச்சப்படுவோர் தாராளமாக ஆப்கானிஸ்தான் செல்லலாம். அங்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை எல்லாம் குறைவுதான். ஆப்கானிஸ்தான் சென்றால் தான் இந்தியாவின் அருமை புரியும் என அவர் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |