Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆப்கான் 1 மேட்ச் கூட ஜெயிக்கல….. “கேப்டன் பதவியிலிருந்து விலகிய முகமது நபி”…. என்ன காரணம்?

டி20 உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி தயார் செய்ததில் ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் தேர்வாளர்கள் மற்றும் நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடு காரணமாக முகமது நபி ஆப்கானிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் நேற்று ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் குவித்தது. அதன் பின் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி த்ரில் வெற்றி பெற்றது. ரஷீத் கான் கடைசியில் அதிரடியாக 23 பந்துகளில் (3 பவுண்டரி, 4 சிக்ஸர்) 48 ரன்கள் எடுத்த  போதிலும் மிடில் பேட்டர்கள் சொதப்பியதால் அந்த அணி தோல்வி அடைந்தது..

இதனால் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகளில் 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இரண்டு போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது. எனவே அந்த அணி 2 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி ஆவது இடத்தில் இருக்கிறது. நேற்றோடு அந்த அணியின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. கடைசி போட்டியிலாவது ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறும் என நம்பிய அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் முகமது நபி  தேர்வாளர்கள் மற்றும் நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடு காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் “எங்கள் டி20 உலகக் கோப்பை பயணம் முடிவுக்கு வந்தது, இதனை நாங்களும் எங்கள் ரசிகர்களும் எதிர்பார்க்கவில்லை” “போட்டிகளின் முடிவுகளால் உங்களைப் (ரசிகர்கள்) போலவே நாங்களும் விரக்தியடைந்துள்ளோம்.

“கடந்த ஒரு வருடமாக, உலகக்கோப்பை போன்ற மிக பெரிய (ஐசிசி) போட்டிக்கு கேப்டன் விரும்பும் அல்லது தேவைப்படும் அளவிற்கு எங்கள் அணி தயார்படுத்தப்படவில்லை. மேலும், கடந்த சில சுற்றுப்பயணங்களில் அணி நிர்வாகம், தேர்வுக் குழு மற்றும் நான் ஒரே மாதிரியாக இல்லை. வேறுபாடு இருந்தது. இது அணி சமநிலையில் தாக்கங்களை ஏற்படுத்தியது.

“எனவே, உரிய மரியாதையுடன், நான் ஒரு கேப்டனாக உடனடியாக ராஜினாமா செய்வதை அறிவிக்கிறேன், மேலும் நிர்வாகத்திற்கும், அணிக்கும் நான் தேவைப்படுவேன் என்று நினைத்தால் என் நாட்டிற்காக சாதாரண வீரராக தொடர்ந்து விளையாடுவேன். “மழையினால் போட்டிகள் பாதிக்கப்பட்டாலும் மைதானத்திற்கு வந்த உங்கள் ஒவ்வொருவருக்கும், உலகளவில் எங்களை ஆதரித்தவர்களுக்கும் என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், உங்கள் அன்பு உண்மையிலேயே எங்களுக்குப் பெரியது. ஆப்கானிஸ்தான் வாழ்க.” என்று தெரிவித்துள்ளார்..

 

Categories

Tech |