கேபிள் ஆப்பரேட்டர் உரிமம் பெற ஏற்பட்ட தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்கிந்த்புரத்தில் கேபிள் ஆப்பரேட்டரான துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆனந்த் கேபிள் ஆப்பரேட்டர் உரிமம் தனக்கு தருமாறு கடந்த சில மாதங்களாக துரைராஜ்யிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் துரைராஜ் கேபிள் ஆப்பரேட்டர் உரிமம் தருவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த ஆனந்த், துரைராஜின் வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளார்.
அதன்பின் நள்ளிரவில் துரைராஜின் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு, ஆனந்த் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதில் துரைராஜ் குடும்பத்தினருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து துரைராஜ் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.