தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையை ஒழிக்கும் அடிப்படையில் “ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 2.0” எனும் பெயரில் ஏப்ரல் 27 வரை தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். அந்த வகையில் மாநிலம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனைக்கு எதிராக காவல்துறையினரின் அதிரடி வேட்டை நடைபெறுகிறது.
கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா வியாபாரிகள் 350 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களிடம் 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதிகபட்சம் சென்னையில் 50 பேர், கோவையில் ஒடிசாவைச் சேர்ந்த நிபாஸ் பண்டிகி என்பவர் உட்பட 32 பேர், ஈரோட்டில்10 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் தொடர் சோதனையில் மேலும் பல முக்கியமான புள்ளிகள் சிக்குவர் என்று காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.