திருவாரூர் மாவட்டத்தில் வியாபாரத்தை பெருக்கும் நோக்கத்தில் ஆடை எடுத்தால் ஆடு பரிசு என்று விளம்பரம் செய்துள்ள துணிக்கடையில் மக்கள் கூட்டம் குவிந்தனர். வருகின்ற நவம்பர் மாதம் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் துணிக்கடைகள் மற்றும் வெடிக்கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நியூ சாரதா என்ற துணிக்கடையில் ஒரு வித்தியாசமான விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கத்தோடு 1,000 ரூபாய்க்கு மேல் ஆடை வாங்கினால் தங்க நாணயம், ஆட்டுக்கிடாய், மற்றும் 25 பட்டுப்புடவைகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஆடைக்கு ஆடு என்ற விளம்பரம் ஆரூரில் பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் கூட்டம் அங்கு அதிகமாக குவிந்துள்ளது.