ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் வசித்து வரும் மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருப்பதால், தங்கள் நாடுகளை விட்டு வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் கடல்வழி பயணம் மேற்கொண்டு செல்கிறார்கள். இவ்வாறான ஆபத்து நிறைந்த கடல் வழி பயணங்களை மக்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று அரசு சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் மக்கள் எவரும் அதனை கண்டுகொள்வதில்லை.
இந்நிலையில் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளிலிருந்து கடல் வழி பயணம் சென்று கொண்டிருந்த சிலர் துனிசியா கடற்பகுதி அருகே செல்லும்போது திடீரென படகு நீரில் மூழ்கியது. அப்போது நீரில் சிக்கிய அனைவரும் நீச்சல் தெரியாமல் தத்தளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 11 பேரின் உடல்களை சடலமாக மீட்டனர். அதில் இரண்டு பேர் குழந்தைகள். மேலும் கடலில் சிக்கிய சிலரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.